மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு! 32 ஆண்டுகளை கடந்தும் மனதில் நிற்கும் இளையராஜா வாலி கூட்டணியின் இனிய பாடல் வரிகள்!

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து கடந்த 1991ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தளபதி. இப்படத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி , ஷோபனா, அரவிந்த்சாமி, பானுப்ரியா போன்றோர் நடித்திருந்தனர்.

படத்தின் கதைப்படி ஆரம்ப டைட்டிலிலேயே வரும் இனிய பாடல்தான் மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு ஹோ ஹோய் நாளைக்குத்தான் தை பிறக்கும் தேதியாச்சு என்ற பாடல்.

இளையராஜாவின் இசையில் வந்த இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பெரிய வெற்றியை அடைந்தது. இன்று வரை போகி முடிந்து பொங்கல் தொடங்கும் நாளில் இந்த பாடலைதான் சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த பாடலை எழுதியவர் வாலிப கவிஞர் வாலி. அவரால்தான் இப்படி சிறப்பான வரிகளை எழுத முடியும். சிறப்பான வரிகளை கொண்டு இந்த பாடலை எழுதிய வாலியின் வைர வரிகளை போகி மற்றும் பொங்கல் வந்து விட்டால் முணு முணுக்காதவர் இல்லை.

32 வருடங்களை கடந்தும் இன்று இந்த பாடல் டாப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment