காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு

குளித்தலை காவிரி ஆற்றில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் 46 மணிநேரத்திற்கு பின் இறந்த நிலையில் சடலமாக மீட்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் சுரேந்தர் (18). இவர் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தனது உறவினரின் பரிகார நிவர்த்திக்காக குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றிற்கு வந்துள்ளார்.

அப்போது காவிரி ஆற்றில் ஆழமான பகுதியில் குளித்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்புத் துறையினர் நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞரை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை தண்ணீர்பள்ளி சாந்திவனம் காவிரி ஆற்றில் இறந்த நிலையில் சடலமாக முசிறி தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.

சுமார் 46 மணி நேரத்திற்கு பின் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

குளித்தலை காவிரி ஆற்றில் பகுதியில் இது போன்ற அடிக்கடி நீரின் அடித்து செல்லப்படும் போது தகவல் அறிந்து மீட்பு பணியில் ஈடுவதற்கு முசிறி தீயணைப்புத் துறையினருக்கு நேர விரயம் ஆகி வருகிறது. எனவே உடனடியாக துரித மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டுமென்றால் குளித்தலை பகுதியில் தீயணைப்பு நிலையம் வேண்டும் என்றும் பொதுப்பணிதுறையினரும் இது போன்ற துயர சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை பணிகளில் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆறு நாட்களில் குளித்தலை காவிரி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment