Connect with us

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவி உடல்-மறுகூராய்வு நிறைவு.!!

156511 death1

தமிழகம்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவி உடல்-மறுகூராய்வு நிறைவு.!!

நேற்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.  நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்களின் பின்புலம் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி கூறி இருந்தார். மேலும் மாணவியின் பெற்றோர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டாம் என்றும் அவர்கள் மீது இரக்கப்படுகிறேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் மாணவியின் உடலை மறுபரித பரிசோதனை செய்ய உத்தரவிட்டு அதற்கான குழுவினையும் அறிவித்திருந்தார். தற்போது மறு கூறாய்வு நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தனியார் பள்ளி மாணவியின் உடல் மறு கூறாய்வு நிறைவு பெற்றது. பெற்றோர் இல்லாமல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி தந்த நிலையில் மறு உடல் கூறாய்வு நிறைவு பெற்றது.

மருத்துவர்கள் ஜூலினா ஜெயந்தி, கீதாஞ்சலி மற்றும் கோகுல ரமணன் மறு உடல் கூறாய்வு செய்தனர். தடவியல் துறை நிபுணர் சாந்தகுமார் முன்னிலையில் மாணவி உடலுக்கு மறு கூறாய்வு நடைபெற்றது. மறு கூறாய்வு நிறைவடைந்த மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top