Connect with us

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் நேருக்கு நேர் மோதல்: பயணிகள் மாயம்!

News

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் நேருக்கு நேர் மோதல்: பயணிகள் மாயம்!

62a26bf1357f853203a5eadf6970fe8b

அசாம் மாநிலத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் 2 படகுகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஏராளமானோரை காணவில்லை என்றும் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மோதிய இரண்டு படகுகளில் ஏராளமான பயணிகள் இருந்தார்கள் என்றும் அவர்களில் பலரை காணவில்லை என்பதால் எத்தனை பேர் காணவில்லை என்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே ஒரு பெண் உயிரிழந்துள்ள நிலையில் இன்னும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது

இந்த நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் இரவு பகலாக தேடப்பட்டும் இன்னும் ஒருவர் கூட மீட்கப்படவில்லை இன்று என்பதும் உயிரிழந்த பிணமும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் 90க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கலாம் என்று கூறப்பட்டு வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top