Connect with us

சென்னை மெரீனாவில் படகு சவாரி: அமைச்சர் அறிவிப்பு

Tamil Nadu

சென்னை மெரீனாவில் படகு சவாரி: அமைச்சர் அறிவிப்பு

3aeaaa098427ce14ae2c398c4b10944a

சென்னை மெரினாவை அழகுபடுத்த ஏற்கனவே திமுக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் நிலையில் தற்போது சென்னை மெரினாவில் படகு சேவை தொடங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவாணன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார் 

சட்டப்பேரவையில் இன்று சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதில் அவர் ’சென்னை மெரினாவில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதேபோல் ராமேஸ்வரம் – கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் தொடங்குவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் 

மேலும் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவில் ஒளிரும்படி ஒளியூட்டப்படும் என்றும், ஒகேனக்கல் சுற்றுலா தளம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

ராமேஸ்வரம் – கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் மற்றும் படகு சேவை தொடங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறிய அமைச்சர் மதிவாணன், தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top