Connect with us

இனி விமான நிலையங்களில் ‘Boarding Pass’ தேவையில்லை! முக அடையாளமே போதும்;

boarding pass

செய்திகள்

இனி விமான நிலையங்களில் ‘Boarding Pass’ தேவையில்லை! முக அடையாளமே போதும்;

இனி விமான நிலையங்களில் ‘Boarding Pass’ தேவையில்லை! முக அடையாளமே போதும்;

டெக்னாலஜி ஆனது நாள்தோறும் வளர்ந்து கொண்டு வருகிறது. ஏனென்றால் முன்பு பாஸ்வேர்டு முறை காணப்பட்டது. அதன்பின்னர் பிங்கர் பிரிண்ட் முறையிலான லாக் காணப்பட்டது. இந்த நிலையில் இவையெல்லாம் தாண்டி தற்போது முக அடையாளத்தை வைத்து ஓபன் கிளோஸ் செய்யும் முறை அனைத்து விதமான மொபைல் போன்கள் மட்டுமின்றி பல்வேறு விதமான நவீன கண்டுபிடிப்புகளிலும் காணப்படுகிறது.

இதன் ஒரு கட்டமாக போர்டிங் பாஸ்க்கு பதிலாக இனி முக அடையாளத்தை பயன்படுத்த திட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் போர்டிங் பாஸ்க்கு பதிலாக இனி முக அடையாளத்தை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் டிஜி யாத்ரா முயற்சியின் ஒரு பகுதியாக விமானங்களில் பயணம் செய்ய முக அங்கீகார அமைப்பு அறிமுகம் செய்யப்பட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமான நிலையங்களில் பயணத்தின் பதிவுடன் கூடிய டிஜி யாத்ரா பயோமெட்ரிக் போர்டிங் முறையின் முதற்கட்ட சோதனை முடிந்துள்ளது. கொல்கத்தா, வாரணாசி, விஜயவாடா, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களில் மார்ச் 2023ல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் பயணிகளுக்கு தடையற்ற தொந்தரவில்லாத அனுபவத்தை வழங்க முக அங்கீகாரம் அமைப்பு செயல்படுத்தப்பட உள்ளது. விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் க்கு பதிலாக அடையாளத்தை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top