நவீன நடிகர் திலகம் விஜய் ஆண்டனி!.. மீண்டும் விஜய் ஆண்டனியை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!..

மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் ப்ளூ சட்டை மாறன் தொடர்பான கேள்வியை செய்தியாளர்கள் விஜய் ஆண்டனியை பார்த்து கேட்டு பற்ற வைத்த நிலையில், நமக்கு எதுக்குப்பா வம்பு என விலகி சென்ற விஜய் ஆண்டனியையும் விடாமல் தற்போது வம்பிழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

ப்ளூ சட்டை மாறன் விஜய் ஆண்டனி மோதல்:

பிரபல ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் கோலி சோடா படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் சியான் விக்ரம், சமந்தாவை வைத்து அவர் இயக்கிய 10 எண்றதுக்குள்ள திரைப்படம் பெரிதாக ஓடவில்லை. அந்த படத்தில் சமந்தாவுக்கு டபுள் ஆக்‌ஷன் கொடுத்து வில்லி கெட்டப் எல்லாம் போட்டு விட்டு காமெடி செய்திருப்பார்.

இந்நிலையில், மழை பிடிக்காத மனிதன் படத்தை விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் மேகா ஆகாஷை வைத்து விஜய் மில்டன் இயக்கி உள்ளார். இந்த படம் அவருக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் வெளியான ரோமியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக ஈர்ப்பை உண்டாக்காமல் போக காரணமே ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட விமர்சகர்கள் சொன்ன பொய்யான விமர்சனம் தான் காரணம் என்றும் ரோமியோ படத்தை அன்பே சிவம் படத்தை போல ஆக்கிடாதீங்க என விஜய் ஆண்டனி கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

ப்ளூ சட்டை மாறன் கலாய்:

விஜய் ஆண்டனியின் அந்த ட்வீட்டை பார்த்த ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து அவரை கலாய்க்க ஆரம்பித்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விஜய் ஆண்டனி பங்கேற்ற நிலையில், அவரிடம் இளையராஜா வைரமுத்து பிரச்சனை குறித்தும் கேட்டனர். அப்போது இளையராஜாவிடம் உரிமை உள்ள நிலையில், அவர் கேட்கிறார். அதை தவறாக பார்க்கக் கூடாது என்றார்.

ப்ளூ சட்டை மாறன் குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜய் ஆண்டனி அவர் பாவம் விட்ருங்க, அவர் அவரது வேலையை செய்கிறார். அப்படியெல்லாம் போடலைன்னா அவரை கண்டுப்பீங்களா என பேசி சென்றார்.

அந்த வீடியோ வைரலான நிலையில், அதை பார்த்த ப்ளூ சட்டை மாறன், “அறிவுஜீவி விமர்சகர் ப்ளூசட்டை மாறனுக்கு பாவமன்னிப்பு வழங்கிய நவீன நடிகர் திலகம் விஜய் ஆண்டனி அவர்களுக்கு கோட்டான கோட்டி நன்றி ஐயா” என பதிவிட்டு மரண கலாய் கலாய்த்துள்ளார்.

bsss

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...