காவிக்கு எதிராக களத்தில் இறங்கிய நீலம்.. உச்சகட்ட பரபரப்பில் கர்நாடகா!!

கர்நாடகாவின் கடலோர நகரான உடுப்பியில் பள்ளி வகுப்பறையில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அங்கு உள்ள ஒரு கல்லூரியில் இருதரப்பு சேர்ந்த மாணவர்கள் ஜெய் பீம் என்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் கோஷங்களை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரில் இயங்கிவரும் ஐ.டி.எஸ் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு தரப்பு மாணவர்களும் , இதனை எதிர்க்கும் வகையில் மற்றொரு தரப்பு மாணவர்களும் கோஷமிட்டனர்.

அந்த வகையில் ஆதரவு தெரிவிக்கும் மாணவர்கள் ஜெய்பீம் என்றும் எதிர்க்கும் மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டவாரு கல்லூரியை சுற்றி வந்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment