நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார். இந்த படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஜய்யின் அப்பாவாக நடிகர் சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜூன் 3 தொடங்கியுள்ளது.இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது.இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்க பட்டதாக கூறப்பட்டது.
மேலும் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67வது படத்தில் நடிக்கப்போவதாக உறுதியான தகவல் வந்துள்ளது.அடுத்தடுத்து படபிடிப்பில் பிசியாக இருக்கும் விஜய் இருந்தாலும் அவரது மக்கள் இயக்கத்தின் மூலமாக பல நல திட்ட பணிகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒரு முக்கியமான மீட்டிங் நடைபெற்றது. இதில் பிளட் டொனேஷன் பண்றதுக்காக ஒரு ஆப் வெளியிட்டுள்ளார்கள். இதற்க்கு தளபதி விஜய் மக்கள் குருதியகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்திற்கு ஆப் மட்டும் இல்லாமல் அனைத்து சமூக வலைத்தளங்ளிலும் இதற்காக தனியாக புதிய கணக்குகளை தொடங்கியுள்ளார்கள்.
தளபதி விஜய் ஹைதராபாத்தில் ஷூட்டிங்ல் இருப்பதால் அவரால் இந்த மீட்டிங்ல் கலந்துகொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய் வீடியோ கால் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதை பார்த்ததும் விஜய் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்விகளும் தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால் இதற்க்கு விஜய் பல முறை பதில் அளித்து உள்ளார்.விஜய் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்ற விடையை நாம் பொறுத்திருந்து தான் அறிந்து கொள்ள வேண்டும்.