Tamil Nadu
திமுக கூட்டணியில் இரண்டு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்பது தெரிந்ததே
அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
மேலும் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
