Connect with us

பள்ளி மாணவி விவகாரம்: 63 யூடியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை!!

Youtube

தமிழகம்

பள்ளி மாணவி விவகாரம்: 63 யூடியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டகாரர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் பள்ளியில் இருக்கும் பொருட்கள் சூறையாடப்பட்டது.

அதோடு போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைதுசெய்துள்ளனர். இந்த சூழலில் ஸ்ரீமதி மரணம் தொடர்பாக வதந்திகளை பரப்பிய 63 யூடியூப் சேனல் களை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே போல் கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் காவல்துறைக்கு இல்லை என  திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மேலும், மாணவி மரணம் தொடர்பாக 5 பேரையும் ஜாமீனில் விடுவிக்க மனு தாக்கல் செய்யநிலையில் விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top