Connect with us

5 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போவுது மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

Tamil Nadu

5 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போவுது மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

9e69060f692d1025d3a4727ef0941016-1

தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து உள்ளதை அடுத்து 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருப்பூர், தென்காசி மற்றும் உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 9, 10 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மேகமூட்டமாக இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top