Connect with us

4 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை: வானிலை ஆய்வு மையம்!

Tamil Nadu

4 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை: வானிலை ஆய்வு மையம்!

caa35d06ff4fdb235ef6563b7509fd3d

 இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்க போகிறது என்றும் குறிப்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

செப்டம்பர் 17ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். மேலும் நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்

செப்டம்பர் 18-ம் தேதி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கன மழையும், தென் மாவட்டங்கள், டெல்டாமாவட்டங்கள் மற்றும் காரைக்கால்பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

செப்டம்பர் 19-ம் தேதி வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமுதல் மிகக் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top