குக்கர் குண்டுவெடிப்பு: மங்களூரு விரைந்த தனிப்படை போலீசார்!!

மங்களூரு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கோவை தனிப்படை போலீசார், என்.ஐ.ஏ அதிகாரிகள் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்றுமுன் தினம் பயங்கர சத்தத்துடம் வெடித்து சிதறியது. இதில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பயணி ஒருவர் பலத்த காயமடைந்தார்.

தங்கம் விலை மீண்டும் சரிவு: எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் 2 பேரும் தற்போது மங்களூரு வென்லாக் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே விபத்து குறித்து தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

அதில் குக்கரில் வெடிபொருள் வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சூழலில் கோவையில் நடைப்பெற்ற சம்பவம், மற்றும் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த கோவை தனிப்படை போலீசார், என்.ஐ.ஏ அதிகாரிகள் மங்களூரு விரைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.