வெடி விபத்து:பீகாரில் 6 பேர் பலி!!

கடந்த சில நாட்களாக வெடிவிபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தப்போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தில் இருக்கும் ஒருவரின் வீட்டில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உராய்வின் காரணமாக திடீரென வெடிபொருள் வெடித்து சிதறியதால் கட்டிடங்கள் முழுவதும் தரைமட்டமாகியது. அதோடு இந்த விபத்தில் 6 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கட்டிட இடிபாடுகளில் 10-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என அம்மாநில தீயணைப்பு வீரர்கள் கூறுகின்றனர்.

மேலும், விபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் குழு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழு வரவழைக்கப்பட்டு விசாரித்து வருவதாக சந்தோஷ் குமார், சரண் எஸ்.பி தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment