Connect with us

பாஜக-வின் பணம் இதற்கு தான் செலவாகிறது – அரவிந்த் கெஜ்ரிவால்!!

Capture 69

செய்திகள்

பாஜக-வின் பணம் இதற்கு தான் செலவாகிறது – அரவிந்த் கெஜ்ரிவால்!!

கடந்த சில நாட்களாவே ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே கடும் மோதல்கள் நிலவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோதியா பாஜகவில் இணைந்தால் முதல் பதவி கொடுப்பதாக கூறி குறுஞ்செய்தி வந்ததாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அதன் ஒரு பகுதியாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்-களுக்கு தலா 20 கோடி ரூபாய்க்கு பாஜக பேரம் பேசுவதாக அடுத்த கட்ட புகார் எழுந்தது. இதன் காரணமாக டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைப்பெற்றது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக கட்சியானது ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ 20 கோடி கொடுத்திருந்தால், அவர்கள் ரூ 5,500 கோடிக்கு எம்எல்ஏக்களை வாங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

இதன் காரணமாக தான் பாஜக-வின் பலம் அதிகரித்து சாமானிய எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதாக தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பாஜக அரசானது அனைத்து பணங்களையும் இரண்டு விஷயங்களுக்காக செல விடுவதாக கூறியுள்ளார். குறிப்பாக எம்எல்ஏக்களை வாங்குவதற்கும், கோடீஸ்வர நண்பர்களின் கடனை தள்ளுபடி செய்வதற்கு பயன்படுத்துகிறது என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top