இடைத்தேர்தலில் பாஜக பெரும் சறுக்கல்! ஜெ.பி. நட்டா தலைமையில் நாளை செயற்குழு கூட்டம்!

சில நாட்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் ஆளும் கட்சியான பாஜகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பாஜக தலைமை செயற்குழு கூட்டத்தை அறிவித்துள்ளது.

ஜெ.பி.நட்டா

அதன்படி பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நாளைய தினம் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள் உள்பட பல முக்கிய தலைவர்கள் நேரடியாக பங்கேற்கின்றனர்.

பாஜக மாநில தலைவர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் பங்கேற்கின்றனர். இடைத்தேர்தலில் பாஜக சந்தித்த சறுக்கல் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் உத்தரபிரதேச மாநிலம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் பற்றியும் இதில் தீவிர ஆலோசனை நடைபெற உள்ளது. ஏனென்றால் தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி நடைபெறுகிறது.

இதனால் பாஜகவின் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக இந்த செயற்குழு கூட்டம் அமைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாளைய தினம் சிறப்புரையாற்ற உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment