புதுச்சேரியில் இரட்டைக் கொலை-பாஜக மாநில இளைஞரணி செயலாளர் கைது!

இந்த காலகட்டத்தில் கொலை என்பது சாதாரண ஒரு செயலாக மாறிவிட்டது. ஏனென்றால் நாள்தோறும் பல இடங்களில் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. சட்டத்தின் முன்பு யாரும் தப்பிக்க முடியாது. எங்கு இருந்தாலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு இரட்டை கொலை நடந்தது. இந்த இரட்டை  கொலை விவகாரத்தில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக பாஜக மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த பாஜக மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷை சிறப்பு அதிரடி படை போலீசார் கைது செய்தனர். இரட்டை கொலையில் பாஜக நிர்வாகி விக்னேஷ் மற்றும் தாதா மணிகண்டன் ஆகியோர் மூளையாக செயல்பட்டது அம்பலமானது. புதுச்சேரியில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி பாம் ரவி மற்றும் அந்தோணி ஆகியோர் மீது வெடிகுண்டு வீசி அவர்கள் கொல்லப்பட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment