பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள்; தமிழக முதல்வர்!!

திமுகக்காவை பொறுத்தவரையில் இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட 23 நிர்வாக அணிகள் உள்ளன. இந்நிலையில் 23 நிர்வாக அணிகளோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுப்பட்டு இருந்தார்.

அப்போது நிர்வாகிகளிடம் பேசிய அவர் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் இப்போதிலிருந்தே துவங்க வேண்டும் அறிவுறுத்தல் வழங்கி இருந்தார். அதே போல் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெருவதற்கு பாஜவினர் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

ராகுல்காந்தி யாத்திரையில் குளறுபடி.. அமித் ஷாவுக்கு பறந்த கடிதம்!!

அவர்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் 23 அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிர்வாக பொறுப்புகளை பெருமையாக கருதி கொள்ளாமல் களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து 23 அணிகளையும் கண்காணிக்க ஐ.பெரியசாமி, கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்ட துணைப்பொதுச்செயலாளர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்து உள்ளார்.

பொங்கலில் கரும்பு வழங்க கோரிய வழக்கு: ஐகோர்ட் புதிய உத்தரவு!!

அதன் படி இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்பட 5 அணிகளுக்கு ஐ.பெரியசாமி பொறுப்பாளர் என்றும் மகளிர் அணி, தொண்டரணி உள்ளிட்ட 5 அணிகளுக்கு கனிமொழி பொறுப்பாளர் என முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.