Connect with us

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பணத்தால் கவிழ்க்கும் பாஜக!!

yashwandh singhka

செய்திகள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பணத்தால் கவிழ்க்கும் பாஜக!!

நம் இந்தியாவில் இன்னும் சில நாட்களில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதன்படி எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து யஸ்வந்த் சின்காவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு ஆதரவு தருவது போல் தெரிகிறது. இதனால் இன்றைய தினம் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஸ்வந்த் சின்கா சென்னை அண்ணா அறிவாலயத்தின் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க வந்திருந்தார்.

மேலும் அவரை சந்தித்து சில பல பேச்சுவார்த்தைகளை நடத்தினார் .அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பாஜக அரசு பற்றி விமர்சனம் செய்துள்ளார். அதன்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பணத்தால் கவிழ்க்கிறது பாஜக என்று யஸ்வந்த் சின்கா பேட்டி அளித்தார்.

சென்னையில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளிடம் ஆதரவு கோரிய பின் பேட்டி அளித்தார். அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது என்றும் யஸ்வந்த் சின்கா கூறினார். அரசியலமைப்பை சிதைக்கும் வகையில் மத்திய பாஜக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டை வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top