Tamil Nadu
குற்றச்சாட்டுக்கு மறுப்பு சொல்ல வக்கில்லாதவர் முக ஸ்டாலின்: பாஜக கடும் தாக்கு

சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘இந்து தீவிரவாதம்’ குறித்து பேசினார். இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியதாவது:
முக ஸ்டாலின் அவர்களின் இந்த டுவிட்டுக்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: நெஞ்சில் நஞ்சும்,வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியான நடவடிக்கை தேவை!
இந்த கண்ணாடி முன் நின்று தானே பேசுகறீர் முக ஸ்டாலின் உள்ளதை சொன்னால் கோவம் வருவது இயல்பு. ஆனால் அது உங்களுக்கு பொருந்துமா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டுக்கு ஒரு வார்த்தை மறுப்பு சொல்ல வக்கில்லாதவர் அவரை பதவி விலக சொல்வது நகை முரண். பேச்சுரிமை உங்கள் குடும்ப சொத்தா என்ன? என்று கூறியுள்ளது.
