பாஜக:அசாமில் அனைத்திலும் வெற்றி! பிற மாநிலங்களில் பெரும் ஏமாற்றம்!!

இன்றைய தினம் இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களில் இடைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு நிகழ்ந்ததாக காணப்படுகிறது.  29 சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மட்டும் 16 தொகுதிக  கைப்பற்றுகின்றனர்.பாஜக

இமாச்சல பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முன்னணியில் உள்ளது. மக்களவைத் தொகுதி, மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்று உள்ளதால் ஆளும் பாஜக அதிர்ச்சியில் உள்ளது.

கர்நாடகத்திலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு நிகழ்கிறது. அதன்படி இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்த கர்நாடகத்தில் ஒரு தொகுதியை மட்டுமே பாஜக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள ஹங்கால் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 7 ஆயிரத்து 591 வாக்குகள் வித்தியாசத்தில் ஹங்கால் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ்மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.பாஜக செல்வாக்குள்ள தின்ஹட்டா தொகுதியில்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் பாஜக அதிர்ச்சியில் உள்ளன.

இதனால் மேற்கு வங்கத்தில் பாஜக படுதோல்வியை தழுவியுள்ளது. தின்ஹட்டா  தொகுதியில் பாஜக வேட்பாளரை 1.40 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீழ்த்தியுள்ளார்.

ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடந்த இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. மராட்டியத்தில் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக வேட்பாளரை விட 90 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் முன்னணியில் உள்ளார்.

தத்ரா நாஹர்ஹாவேலி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளரை விட 40,000 வாக்குகள் அதிகம் பெற்று சிவசேனா முன்னிலையில் உள்ளார்.

மத்தியபிரதேச இடைத்தேர்தலில் நடைபெற்ற மூன்று தொகுதிகளில் 2 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. மத்திய பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் நடந்த தன்த்துவா மக்களவைத் தொகுதியில் பாஜக கைப்பற்றும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆளும் பாஜகவை விட எதிர்க் கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றி தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசாமில் இடைத் தேர்தல் நடைபெற்ற ஐந்து தொகுதிகளிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment