மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.
மேலும், சொத்து பட்டியல் மற்றும் அதன் இருப்பிடம் ஆதாரமாக வெளியிடப்படும். ஒரு பென்டிரைவில் அதன் நகல் ஊடக நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். துபாயில் வணிகம், வணிக வளாகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அவர்களின் அனைத்து முதலீடுகளும் அதில் பிரதிபலிக்கும் என கூறியுள்ளார்.
மேலும் 10 ஆண்டு கால வங்கிக் கணக்குகளுடன் அவர் கூறிய அனைத்தும் விரைவில் பொதுமக்களுக்காக வெளியிடப்படும் என்று அண்ணாமலை கூறினார்.
பாஜகவை 420 கட்சி என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு, அண்ணாமலை “உதயநிதியின் தகுதி என்ன? அவரது கல்வி பற்றி என்ன? எங்கே போனான், எப்படி கஷ்டப்பட்டான்? யாரிடம் போனான், என்ன பேசினான்? இவரின் திறமைக்கு மக்கள் வாக்களித்தார்களா? சேப்பாக்கம் தொகுதி தி.மு.க.வுக்கு பெரும்பான்மையாக உள்ளது, அங்கு யார் போட்டியிட்டாலும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்” என்றார்.
பாஜகாவில் இருந்து வெளியேறிய மேலும் 3 தலைவர்கள்… அதிமுகவுடன் கூட்டணி
“மேலும், இன்று நீட் பற்றி உதயநிதி பேசுகிறார், அவருக்கு நீட் ஃபார்முலாவை எப்படி சரி செய்வது என்று தெரியுமா? இல்லை.ஆனால், அவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர். தமிழகத்தில் ஒரு காலத்தில் வல்லுநர்கள் மட்டுமே கருத்து சொல்லும் காலம் இருந்தது, ஆனால் இன்று உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் அந்த கருத்தை பேசுகிறார்கள் என கூறியுள்ளார்.