Connect with us

50 லட்சம் மோசடியில் பாஜக ஆதரவாளர் கைது: அண்ணாமலை கண்டனம் !!

202108120843172026 Tamil News Tamil News Annamalai says PM Modi sown hope in minds farmers SECVPF

Tamil Nadu

50 லட்சம் மோசடியில் பாஜக ஆதரவாளர் கைது: அண்ணாமலை கண்டனம் !!

தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவிற்கு எதிராக தனது யூடியூப் சேனல் மூலம் குரல் கொடுத்து வருபவர் கார்த்திக் கோபிநாத். இவர் பாஜக ஆதரவாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதில் வசூல் செய்தபோது சுமார் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தெரிகிறது.

குறிப்பாக சிறுவாச்சூர் கோவிலில் சித்திரை திருவிழாவின் போது அடையாளம் தெரியாத நபர்களால் சிலைகளை உடைக்கப்பட்டதாக தெரிகிறது . இதனை சரி செய்ய இவர் ஆன்லைன் வாயிலாக நிதி வசூலித்தாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் பாஜக ஆதரவாளர் கார்த்தி கோபிநாத் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பெயரில் கார்த்தி கோபிநாத் போலீசார் இன்று காலை அவரை  போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அண்ணாமலை மற்றும் ராஜா ஆகியோர் கண்டன் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தங்களுக்கு எதிரான குரல்களை ஒடுக்க திமுக அரசு முயற்சிக்கிறது. கார்த்திக் கோபிநாத்தின் தந்தையிடம் நான் பேசினேன். கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக நிற்போம். தமிழக பாஜகவின் சட்டக் குழுவினர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக இருப்பர் என பதிவிட்டுள்ளார்.

அதே போல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், கார்திக் கோபிநாத் கைது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இந்துக்களோ இந்து கோவில்களோ பாதிக்கப்பட்டால் அதற்கு உதவிட யாரும் முன்வரக்கூடாது என பயமுறுத்தும் இந்து விரோத அரசின் வன்மத்தின் வெளிப்பாடு என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top