உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி : அமித்ஷா நம்பிக்கை

உத்தரப்பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இருப்பினும் உ.பி.யில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக இருக்கிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா உ.பி.யில் சமீபகாலங்களில் நடந்ததேர்தல்களில அடுத்தடுத்து பாஜக வெற்றி வாகை சூடியது.

அதைப்போலவே 2022 சட்டசபை தேர்தலிலும் பாஜக அனைத்து கட்சிகளையும் பின்னுக்குத்தள்ளி வெற்றியைப் பெறும். உ.பி.யில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக இந்த முறையும் நிச்சயம் கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2017-ல் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சிக்கு முன்னதாக சட்டம் ஒழுங்கு மிகமோசமாக சீர்குலைந்து இருந்தது. ஆனால் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைந்த பிறகு கிரிமினல்கள் உ.பி.யை விட்டே ஓடிவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment