பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து நவம்பர் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம்!

இந்தியாவில் மத்திய அரசாக காணப்படுகிறது பாரதிய ஜனதா கட்சி. இந்த பாரதிய ஜனதா கட்சிக்கு தற்போது தமிழகத்தில் படிப்படியாக வரவேற்பு கிடைத்துள்ளதாக காணப்படுகிறது.  20 ஆண்டுக்கு பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக காணப்படுகிறார் அண்ணாமலை. அவர் அவ்வப்போது ஆளும் கட்சியை பற்றி விமர்சித்து வருவார். இந்த நிலையில் நவம்பர் 22ம் தேதியில் தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நிகழ்த்தும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பெட்ரோல்

அதன்படி பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து நவம்பர் 22ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்று தமிழ் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு இவ்வாறு பேட்டி அளித்தார். அதோடு மட்டுமில்லாமல் மழையால் பாதித்த குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க கோரி நவம்பர் 19ம் தேதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பாஜக நிகழ்த்தும் என்று கூறியுள்ளார்.

மழை வெள்ள நிவாரணம் வழங்க கோரி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் பாஜக முழு நேர போராட்டத்தில் ஈடுபடும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment