Connect with us

வாயை திறந்தாலே பொய்… பிடிஆரை சகட்டுமேனிக்கு சாடிய வானதி!

Vanathi

News

வாயை திறந்தாலே பொய்… பிடிஆரை சகட்டுமேனிக்கு சாடிய வானதி!

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு விவகாரத்தில் நிதியமைச்சர் உண்மைக்கு புறம்பான பல்வேறு விஷயங்களை பேசி உள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன் பேசியதாவது: சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர், நிதியமைச்சர், உண்மைக்கு புறம்பான பல்வேறு விஷயங்களை பேசி உள்ளனர்.

மத்தியர அரசு கலால் வரியை உயர்த்தி உள்ளதாக சொல்கிறார்கள். மாநிலத்தில் பண வீக்கம் நிலையை கணக்கிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை இந்தியா உறபத்தி செய்யவில்லை.

பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்யும் பட்டியலில் தான் இந்தியா இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் வாட் வரியை குறைத்ததால் ஒரு லட்சம் கோடி இழப்பிடு ஏற்படும் என அறிக்கை சொல்கிறது.

கடந்த நவம்பர் மாதம் முதல் 2,800 கோடி ரூபாய் வாட் வரியாக தமிழக அரசு பெற்றுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வரும் வருவாயை மத்திய அரசு வீட்டிற்கு கொண்டு செல்லவில்லை. தடுப்பூசி உட்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது எனத் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top