Connect with us

மதம் சார்ந்த அவதூறு பேச்சு: பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் சஸ்பெண்ட்!!

Capture 50

செய்திகள்

மதம் சார்ந்த அவதூறு பேச்சு: பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் சஸ்பெண்ட்!!

கடந்த சில நாட்களாகவே தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் கலைஞர் முனாவர் பரூக்கி விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இத்தகைய செயலுக்கு இஸ்லாமியர் தரப்பில் கடும் எதிர்ப்பு நிலவிய நிலையில் எம்எல்ஏ ராஜா சிங்கை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதனடிப்படையில் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் மீது முகமது நபிக்கு எதிராக அவதூறான கருத்து தெரிவித்தாக கூறி இன்று காலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த சூழலில் முஹம்மது நபியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக தெலுங்கானா எம்எல்ஏ டி ராஜா சிங்கை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். குறிப்பாக முஹம்மது நபியை இழிவுபடுத்தும் வகையில்  பேசியதின் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

மேலும், சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக 10 நாட்களில் ராஜா சிங் விளக்கம் அளிக்க வேண்டுமென பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top