உத்தரப் பிரதேசத்தில் பாஜக அமைச்சர் ராஜினாமா! இதுதான் ராஜினாமாவுக்கு காரணமா?

இந்தியாவின் ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது .

இந்தியாவில் அதிகமாக சர்ச்சைக்குள்ளாகும் மாநிலமாகவும் உத்தர பிரதேச மாநிலம் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் திடீரென்று உத்தரபிரதேச மாநில அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக சேர்ந்த மாநில அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். பாஜகவிலிருந்து விலகி, அதற்கான காரணத்தையும் கூறி விட்டு விலகியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அந்தப்படி பாஜகவில் ஓபிசி மற்றும் பட்டினத்தார் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதாக புகார் தெரிவித்து சுவாமி பிரசாத் மவுரியா ராஜினாமா செய்கின்றார். உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மாநில அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா ராஜினாமா செய்துள்ளதால் அங்கு பரபரப்பாக நிலவுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment