அவதூறு கருத்து: பாஜக தலைவர் உத்தம ராமசாமி அதிரடி கைது!

திமுக எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன் கோவை பீளமேடு பகுதியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் உத்தம ராமசாமி, திமுக எம்.பி ஆ.ராசாவை ஒருமையில் பேசியது மட்டுமல்லாமல் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருந்தார்.

அதோடு தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்கள் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதன் காரணமாக தந்தை பெரியார் கழகம் சார்பில் உத்தம ராமசாமி கைது செய்யப்பட வேண்டும் என புகார் மனு அளித்திருந்தனர்.

அதன் பேரில் பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்குப் பிறகு உத்தம ராமசாமியை கைது செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக தொண்டர்கள் பீளமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மேலும், 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment