ஆளுநருக்கு எதிராக அண்ணாமலை சொன்ன அதிரடி கருத்து; பாஜகவில் பரபரப்பு!

ஆளுநர் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக இருக்க எனத் தெரிவித்த கருத்துக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தமிழ்நாட்டு ஆளுநரின் கருத்துக்கு எதிராக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. திண்டுக்கல்லில் பாரதீய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தமிழக ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணியில் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுடன் கவர்னர் கலந்துரையாடிய போது ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள நீங்கள் மத்திய அரசு சொல்வதை தான் கேட்க வேண்டும் என பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுடன் தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஒத்துப் போக வேண்டும். அவர்களுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும். என்ன அர்த்தத்தில் கவர்னர் சொன்னார் என்று எனக்கு சரியாக தெரியவில்லை எனக்கூறினார்.

என்னை பொறுத்தவரை நூறு சதவீதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு தான் விசுவாசமாக இருப்பேன். மாநில அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறார்கள் என்றால் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் கடமையாகும் அப்படி இல்லை என்றால் மக்கள் ஆட்சி நடத்துவது கடினமாகும் அதேபோல் மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறுவதில் தவறு இல்லை என்ற கேள்விக்கு திமுக அரசு மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறுவது தவறு, அதனை ஏற்க முடியாது எனக்கூறினார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி போராடி வருகிறார் ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ன பாரதிய ஜனதா கட்சிக்கு நம்பிக்கை உள்ளது. தமிழகம், தமிழ்நாடு இரண்டும் ஒன்றுதான். மு க ஸ்டாலின் அவர்கள் பலமுறை தமிழகம் என்று பேசியிருக்கிறார். ஆளுநர் தமிழகம் என்று குறிப்பிட்டது ஒன்றும் தவறில்லை. அரசியலுக்காக திமுக இதை பெரிதுபடுத்துகிறது.

ஆளுநர் தமிழக கலாச்சாரத்தை முழுவதுமாக உணர்ந்தவர். ஆளுநர் உரை கூட தமிழில் தான் அவர் பேசியிருக்கிறார். தமிழர் கலாச்சாரத்தை ஒருபோதும் பாரதிய ஜனதா விட்டுக் கொடுக்காது. பல மாநிலங்களில் மத்திய அரசு மாநில அரசு சமூகமாக செயல்படுகின்றன. அதிகாரிகளை பொறுத்தமட்டில் மத்திய அரசும் வேண்டும், மாநில அரசும் வேண்டும். வண்டியில் இரு சக்கரம் போன்றது மத்திய அரசும் மாநில அரசும் இரண்டும் ஒரே வேகத்தில் செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.