பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிவகங்கை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

சிவகங்கையில் நேற்று முன் தினம் வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது.

வீரமங்கை வேலு நாச்சியார் சிவகங்கையை ஆண்ட பெண் அரசி ஆவார் .சுதந்திரத்துக்காக வெள்ளையர்களை எதிர்த்து போராடியவர் இவர் இவரின் பிறந்த நாளே நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது.

அப்போது அனுமதியின்றி கூட்டம் கூட்டியதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்க மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் சென்றனர் மேலும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் சென்றனர்.

கொரோனா பரவி வரும் நிலையில் வாகனங்களில் அளவுக்கதிகமான கூட்டத்தை இவர்கள் கூட்டியுள்ளதாக இவர்கள் மீது சிவகங்கை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment