காங்கிரஸ் கட்சி திடீர் முன்னிலை.. ஒற்றுமை பாதயாத்திரை எதிரொலியா?

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் நடந்தது என்பதும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்தநிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகித்த நிலையில் தற்போது திடீரென இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில் அதில் 35 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். 31 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. தற்போது முன்னிலையில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றுவிட்டால் காங்கிரஸ் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் குஜராத் மாநிலத்தில் ஆரம்பத்திலிருந்தே பாஜக முன்னிலை வகித்து வருகிறது என்பதும் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் பாஜக 134 தொகுதிகளிலும் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 12 தொகுதிகளிலும் மற்றவை 6 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.