இரவோடு இரவாக பாஜக பிரமுகர் கைது: சென்னையில் பரபரப்பு!

பாஜக பிரமுகர் ஒருவர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பாஜக பிரமுகர்களில் ஒருவர் கல்யாண்குமார் என்பதும் அவர் தனது சமூக வலைதளத்தின் மூலம் அவ்வப்போது பெரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்ததாக கல்யாண்குமார் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பெண்கள் குறித்தும் பெரியார் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு கல்யாண்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment