சமூக நீதியின் வில்லன் பாஜகவே! வைரலாக பரவும் அருணனின் ட்விட்….

ஜனவரி 5ஆம் தேதி நம் தமிழகத்தில் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடர் நடைபெற்றது. இதில் முதன்முறையாக தமிழக ஆளுநர் ரவி உரையாற்றினார். முதலில் அவர் வணக்கம் என்று கூறிவிட்டு உரையை தொடங்கினார். இந்த உரையில் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் நீட் விலக்கு மசோதா பற்றி ஆளுநர் உரையில் எந்த ஒரு தகவலும் இல்லை. இதனால் அடுத்தடுத்து தமிழகத்திலுள்ள கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக திமுக அரசுக்கு 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதேசமயத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். அவர் நீட் விளக்கு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

இதனை தமிழகத்தில் உள்ள பலரும் விமர்சித்து வருகின்றனர். அதன் வரிசையில் அருணன் ட்விட்டர் மூலமாக தங்களின் கருத்தை பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் குறிப்பிட்ட அருணன் சமூகநீதியின் வில்லன் பாஜகவே என்று கூறியுள்ளார்.

நீட் பற்றிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜகவின் வெளிநடப்பு வர்ணாஸ்ரம சுயரூபத்தை அம்பலப்படுத்தி உள்ளது என்று அருணன் ட்விட்டரில் கூறியுள்ளார். வெளிநடப்பு செய்வதன் மூலம் பாஜக கூட்டணிக் கட்சிகளில் இருந்து தனிமை படுத்தி உள்ளது என்றும் அருணன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment