Connect with us

பாஜக தலைமையில்தான் கூட்டணி: விபி துரைசாமி அறிவிப்பால் அதிர்ச்சியில் அதிமுக தலைவர்கள்

News

பாஜக தலைமையில்தான் கூட்டணி: விபி துரைசாமி அறிவிப்பால் அதிர்ச்சியில் அதிமுக தலைவர்கள்

சட்டமன்ற பொதுத்தேர்தல் தமிழகத்தில் விரைவில் வர இருப்பதை அடுத்து முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தேர்தலை சந்திக்க தற்போதே வியூகம் அமைத்து வருகின்றன. இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது

மேலும் இந்த முறை அதிமுக மற்றும் திமுக தனித்துப் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளால் அதிமுக, திமுக கட்சிகளுக்கு பெரிய லாபம் இல்லை என்றும் கூட்டணி கட்சிகளுக்குதான் லாபம் என்று கூறப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது

குறிப்பாக தமிழகத்தில் பெரும் அதிருப்தியை எடுத்து உள்ள பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று அதிமுக திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த விபி துரைசாமி அவர்களுக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து தற்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று கூறினார் மேலும் பாஜகவுடன் எந்தெந்த கட்சிகள் அனுசரித்து போகின்றதோ அந்த கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று கூறியுள்ளார்

விபி துரைசாமியின் இந்த அறிவிப்பு அதிமுக தலைவர்கள் அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top