சென்னையில் உள்ள கமலாலயத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது ‘பாரதப் பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் புதிய இந்தியா-2022’ என்ற நூலினை வெளியிட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் மட்டும் தான் ஆளுநருக்கு பாதுகாப்பு என்பது இல்லாமல் போனதாகவும் தமிழக மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறினார்.
இதனிடையே பாஜக கட்சியில் வந்த போது எந்த வித வேறுபாடு இல்லை என்றும் சட்டப்பேரவையில் இன்று முதல்வர் கூறியது ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் திரைத்துறையில் இருப்பவர்களை பாஜக இயக்கவில்லை என்றும் யாரையும் தொந்தரவு செய்யாத கட்சியாக இருப்பதால்தான் பாஜகவிற்கு பலர் ஆதரவு தெரிவிப்பதாக அவர் கூறினார்.
மேலும், பாஜக கட்சியிடம் புரொடக்ஷன் கம்பெனி இல்லை என நாசுக்காக திமுகவை கிண்டலடித்தது குறிப்பிடத்தக்கது.