Connect with us

மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு!!:வைத்திலிங்கம்;

bjp admk 1

செய்திகள்

மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு!!:வைத்திலிங்கம்;

நம் இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தேர்தல் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. எனவே இந்தியாவின் தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளதாக காணப்படுகிறது.

அதுவும் குறிப்பாக மாநிலங்களவை தேர்தல் குறித்தான கூட்டணிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு திமுக கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

மேலும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதியும் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வலுவான எதிர் கட்சியாக உள்ள அதிமுகவுக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஏனென்றால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி இன்றி தனித்தனியே போட்டியிட்டது. இருப்பினும் கூட தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு தெரிவிப்பதாக வைத்திலிங்கம் கூறினார்.

கோரிக்கை குறித்து கடிதம் தந்ததற்கு ஆதரவு உண்டு என அண்ணாமலை தெரிவித்தார் என்றும் வைத்திலிங்கம் கூறினார். மாநிலங்களவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் வைத்திலிங்கம் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top