பல்லடத்தில் பழவியாபாரியை அடித்த பாஜக நிர்வாகியின் மனைவி தேர்தலில் போட்டி!

சில நாட்களுக்கு முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் சென்றார். சாலையில் அவரது கார் நிறுத்தப்பட்டது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு என்று குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.

இதற்காக பாஜகவினர் நாடெங்கும் போராட்டம் நடத்தினர். அந்த வரிசையில் தமிழ்நாட்டில் பல்லடம் பேருந்து நிலையத்தில் பாஜகவினர் பஞ்சாப் மாநிலத்தில் மோடி பாதுகாப்பிற்கு குறைபாடு ஏற்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அங்கிருந்த தள்ளுவண்டி பழ வியாபாரியை பாஜகவினர் கடுமையாக தாக்கினர். தாக்குதலில் அந்த வியாபாரி மயக்கமடைந்தார். இந்த நிலையில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வணிகரை தாக்கிய பாஜக நிர்வாகியின் மனைவி போட்டியிடுகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பல்லடம் நகராட்சியில் 18வது வார்டில் போட்டியிட பாஜக சார்பில் சசிரேகா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பல்லடத்தில் ஆர்ப்பாட்டத்தின்போது வியாபாரியை தாக்கிய பாஜக நிர்வாகி ரமேஷின் மனைவி சசிரேகா என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் சுவாரஸ்யமான வேட்பாளர்கள் களம் இறங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment