பாஜகவை குறிவைக்கும் தீவிபத்து! திருப்பூண்டியில் பாஜக நிர்வாகியின் காருக்கு தீ வைப்பு!!
இன்று பரபரப்பாக பேசப்படும் செய்தியாக மாறி உள்ளது பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது. அதன்படி சென்னை தியாகராய நகர் கமலாலயத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி எறிந்தனர்.
இதுதொடர்பாக வினோத் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வினோத் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதனால் அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு உள்ள நிலையில் பாஜக நிர்வாகி காருக்கு தீ வைக்கப்பட்டது மற்றுமொரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. திருப்பூண்டியில் உள்ள பாஜக இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் காரில் தீ வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருப்பூண்டியில் பாஜக இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் புவனேஸ்வர்ராமின் காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகி புவனேஸ்வர் ராம் காருக்கு தீ வைத்தது யார் என கீழையூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனால் பாஜகவினர் இடையே பெரும் அதிருப்தி உருவாகியுள்ளது.
