பாஜக நிர்வாகியும் கைது: ராஜேந்திரபாலாஜிக்கு அடைக்கலம் தந்ததற்கு காரணம் என்ன? இதன் பின்னணியில் யார்?

தமிழகத்தில் தொடர்ந்து வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை நடைபெற்றது. முந்தைய ஆளும் கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் அலுவலகங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அடுத்தடுத்து பண மோசடி புகார்கள் குவிந்த வண்ணம் ஆக இருந்தது. இதனால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.

rajendhra balaji 1

அவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று கர்நாடகாவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பிடிபட்டார். கர்நாடகாவில் ஹாசனில் கைதுசெய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜி தமிழகத்தின் ஓசூர் அழைத்து செல்லப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டது மட்டுமில்லாமல் அவருக்கு அடைக்கலம் தந்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கர்நாடகாவில் கைதானார்.

வேப்பனஹள்ளி தொகுதி பாஜக பொறுப்பாளராகவும் உள்ள ராமகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி உடன் கைதாகியுள்ளார். போலீஸ் தேடுதலில்  தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜிக்கு அடைக்கலம் தந்ததாக ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி உடன் காரில் பயணித்த 4 பேரையும் கர்நாடக மாநிலம் ஹாசனில் கைது செய்தது தமிழக போலீஸ். ராமகிருஷ்ணனின் உறவினரும் பாஜகவை சேர்ந்தவருமான நாகேஷ் ராஜேந்திர பாலாஜிக்கு கார் ஓட்டியுள்ளார்.

தலைமறைவாக இருந்த ராஜேந்திரன் பாலாஜிக்கு தங்குமிடம், உணவு, வாகன வசதியை பாஜக நிர்வாகி ஏற்பாடு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜக நிர்வாகி ஒருவரே அடைக்கலம் தந்ததால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

வேறு யாரேனும் சொல்லி ராஜேந்திரபாலாஜி கான ஏற்பாடுகளை அவர் செய்து கொடுத்தாரா? என்று தனிப்படை போலீஸ் விசாரணை செய்து வருகிறது. ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் தமிழ்நாட்டுக்கு அழைத்து வருகின்றனர். விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி ஆஜர்படுத்த தனிப்படை போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment