பறக்கும் படை சோதனையில் பாஜக நிர்வாகி கைது!! பின்னணி என்ன?

உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பொதுமக்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

அந்த வகையில் .கிருஷ்ணாபுரம் மாவட்டம் துறையூர் பாலக்கரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த செந்தில்குமாரை மறித்து சோதனையிட்டனர்.
அதில் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள 3 கிலோ ஹான்ஸ், 860 கிராம் பான் மசாலா மற்றும் 450 கிராம் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பறக்கும் படையினர் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருச்சி புறநகர் மாவட்ட பாஜக பொதுச்செயலராக இருப்பதாகவும், அங்கு பெட்டிக்கடை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் செந்தில் குமாரை துறையூர் போலீசில் ஒப்படைத்து  அவரை  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment