வசமாக சிக்கிய பாஜகவினர்: தேர்தல் பறக்கும் படையிடம் ஒப்படைத்த திமுகவினர்.. பின்னணி என்ன?
நகர்ப்புறஉள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற இருப்பதால் அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பலகட்சி வேட்பாளர்கள் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பது போன்ற வித்தியாசமான முறையில் வாக்காளர்களை கவர்வதற்காக பல வித யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை ஆயிரம் விளக்கு 110- வது வார்டில் பா.ஜ.க வேட்பாளர் ராஜசேகருக்கு ஆதரவாக அவருடைய ஆதரவாளர்கள் நூதன முறையில்
பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் ரூ. 5 லட்சத்துக்கு காப்பீடு வழக்குவதாக போலி ஆவணங்களை வைத்து பிரச்சாரம் செய்தது தெரியவந்தது.
இதனை கண்ட தி.மு.க-வினர் 2 பெண்கள் உட்பட 5 பேரை பிடித்து அருகில் இருக்கும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
