வாயை விட்ட திமுக நிர்வாகி! போலீசார் வழக்குப்பதிவு..!!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதன் புகாரில் திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் சோகம்! வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி!

இந்நிலையில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில மகளிர் அணி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 29-ம் தேதி புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் சைதை சாதிக் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment