ஆ.ராசாவுக்கு மிரட்டல்: பாஜக தலைவர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது!!

திமுக எம்.பி  ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுத்த புகாரில் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், எஸ்சி. எஸ்டி வன்கொடுமை சட்டம் பாய்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாவே பாஜக – திமுக இடையே மோதல்கள் நிலவி வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினத்தில் திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.

இதன் காரணமாக பீளமேடு காவல்துறையினர் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்தனர். இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து வந்தார்.

அதே சமயம் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்ததையடுத்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் நான் என்ன தவறாக பேசினேன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் இதனை சட்டபூர்வமாக எதிர்கொள்வேன் என கூறியிருந்தார்.

தற்போது கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது எஸ்சி. எஸ்டி வன்கொடுமை சட்டம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.