Connect with us

பாஜக சதி! கூட்டணி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சி! திமுக முறியடிக்க வேண்டும்!

News

பாஜக சதி! கூட்டணி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சி! திமுக முறியடிக்க வேண்டும்!

8b037b0a0761ee83008707b056a4a606

தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ளது திமுக. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பெரும்பான்மையை பிடித்து தமிழகத்தில் 10 ஆண்டுக்கு பின்னர் உதயசூரியன் கட்சியான திமுக ஆட்சியை பிடித்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது முதல்வராக உள்ளார் திமுக கட்சியின் தலைவரான முகஸ்டாலின் மேலும் அவர் சில தினங்களாக தமிழகத்தில் நான் அறிவித்து தேர்தல் அறிக்கையை வரிசையாக நிறைவேற்றுகிறார். இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.bd6d50819b524c7ebd9b29371ecd00b8

மேலும் சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி தமிழகத்தின் அண்டை, யூனியன் பிரதேசமாக உன்ன புதுச்சேரியிலும் நடைபெற்றது, மேலும் புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளது .தற்போது ஆட்சியில் உள்ளது என் ஆர் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி. மேலும் அக்கட்சியின் சார்பில் முதல்வராக உள்ளார் அக்கட்சியின் தலைவரான ரங்கசாமி. மேலும் என் ஆர் காங்கிரஸ் கட்சியானது சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது என்பதும் குறிப்பிடதக்கது.

இதுகுறித்து தற்போது விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சில தகவல்களை கூறியுள்ளார் .அதன்படி புதுச்சேரியில் ஆட்சி அமைக்க பாஜக சதி செய்து வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு உள்ளார். மேலும் மக்களால் தேர்வான எம்எல்ஏக்களை பதவியேற்கும் முன்னமே நியம எம்எல்ஏக்களை நியமித்து ஜனநாயக படுகொலை செய்து வருகிறது பாஜக என்றும் அவர் குற்றசாட்டு வைத்துள்ளார். மேலும் பாஜக கூட்டணி என்று பாராமல் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயல்வதை திமுக முறியடிக்க வேண்டும் என்றும் திமுகவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top