Connect with us

மேற்குவங்க அமைச்சர் கைது: பாஜக – காங்கிரஸ் இடையே மோதல்..!!!

u2tf32jc partha

செய்திகள்

மேற்குவங்க அமைச்சர் கைது: பாஜக – காங்கிரஸ் இடையே மோதல்..!!!

சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்த வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் கைது செய்யப்பட்டதால் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

மேற்கு வங்க தொழில் மற்றும் வர்த்தக வர்த்தக துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி கல்வி அமைச்சராக இருந்த போது ஊழல் செய்தது மட்டுமல்லாமல் பணப்பரிமாற்றம் போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதே விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதில் 21 கோடி பணத்தையும் 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் போன்றவைகளை கைப்பற்றினர். அதேசமயம் அமைச்சரிடம் அமலாக்கத்துறை நேற்று இரவு முழுவதும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் விசாரணை அதிகாரிகளுக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை என கூறப்படுகிறது. தற்போது இந்நிலையில் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது . அதேபோல் அவரது உதவியாளரையும் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர் கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளது. இதனால் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ்  மற்றும் பாஜவினர் இடையே மோதல் வெடித்துள்ளது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top