மாநகராட்சி தேர்தலில் தோல்வி: பாஜக தலைவர் ராஜினாமா..!!!

மாநகராட்சி தேர்தலில் பாஜக தோல்வியை அடைந்ததையடுத்து டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா பதவி விலகியதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியை பொறுத்தவரையில் ஆளும் கட்சி ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினர் இடையே கடும் மோதல்கள் நிலவி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் நடைப்பெற்றது. இந்நிலையில் கடந்த வாரம் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்றது. இதில் 250 வார்டுகளில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.

ஹிமாச்சல் முதல்வராக காங்கிரஸின் சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்பு!!

அதே சமயம் 104 இடங்களைப் பெற்று பாஜக இரண்டாவது இடங்களை பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இத்தகைய தோல்வி பாஜகவினர் மத்தியில் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் தேர்தலில் தோல்வியை கண்டதால் ஆதேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

உஷார்! 15 மாவட்டங்களுக்கு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

இதற்கு பாஜக தலைமை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், அம்மாநிலத்தின் துணை தலைவராக இருந்த வீரேந்திர சச்தேவா தற்போது இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.