News
இன்று வெளியாகும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல்!
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பரபரப்பான உத்தரவுகளும், சூழ்நிலைகளும் வெளிவருகிறது. மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

அதற்காக அதிமுக தரப்பில் பாஜக கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் ஆனது இன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இன்று டெல்லியில் தேர்தல் குழுக் கூட்டத்தின் ஆலோசனைக்குப் பின்னர் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
