Connect with us

பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: இந்த முறை கோவா முதல்வர் வேட்பாளர் யார் தெரியுமா?

பாஜக

செய்திகள்

பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: இந்த முறை கோவா முதல்வர் வேட்பாளர் யார் தெரியுமா?

பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: இந்த முறை கோவா முதல்வர் வேட்பாளர் யார் தெரியுமா?

அடுத்த மாதம் இந்தியாவில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

அதிலும் குறிப்பாக கோவா மாநிலத்தில் அடுத்தடுத்து தேசிய கட்சிகள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துக் கொண்டே வருகின்றன. இதன் மத்தியில் நேற்றைய தினம் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கோவா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் யார் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

இந்த நிலையில் பாஜக சார்பிலும் தற்போது கோவா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 34 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா கட்சி.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவா சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது அவர் சங்குலிம் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் பாஜக அறிவித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top